தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் Firstlook வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.படத்தின் இயக்குனர் மித்ரனும்,எடிட்டர் ரூபனும் ட்விட்டரில் உரையாடிக்கொண்டிருந்தனர்.

ஹீரோவை தொடர்ந்து டைனோசர் முட்டையை மித்ரன் எடுக்கிறார் என்று ரூபன் பதிவிட்டார்.அதற்கு பதிலளித்த மித்ரன் இந்த முட்டையில் உங்களுக்கு ஆப்பாயில் கூட போட்டுத்தருகிறேன் ஆனால் நம்ம படத்தின் டீசரை சீக்கிரம் ரெடி பண்ணுங்க என்று தெரிவித்தார்.

ரெடி ஆகிக்கொண்டே இருக்கிறது என்று ரூபன் பதிலளித்துள்ளார்.இதனை அடுத்து ஹீரோ டீசரை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.