தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.இந்த படம் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்ததாக இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறதது.அயலான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.இதனைஅடுத்து இவர் நடிக்கும் டான் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்திற்கு.இந்த படத்தில் ஹீரோயினாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார்.எஸ்.ஜே.சூர்யா,சமுத்திரக்கனி,சூரி,முனீஸ்காந்த்,காளி வெங்கட்,பாலா சரவணன்,RJ விஜய்,சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் கெளதம் மேனன் நடித்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் முதல் பாடலான ஜலபுல ஜங்கு பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது

Bad Vibe'u Jaldhi Jayegaa... Jayega... 💥 Amukku Dumukku Ammal Dummal dhan...! ✨🙌🏻

5️⃣0️⃣Million + views for #JalabulaJangu

A Rockstar @anirudhofficial
Musical 🎸@Siva_Kartikeyan @KalaiArasu_ @SKProdOffl @Dir_Cibi @priyankaamohan #SJSuryah @SonyMusicSouth #DONFromMay13 pic.twitter.com/O4Kls7jT0d

— Lyca Productions (@LycaProductions) March 15, 2022