எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு இடையே தளபதி விஜயின் லியோ திரைப்படம் வெளிவருவதில் அடுத்தடுத்து பலவிதமான எதிர்மறையான விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழ்நிலையில் தற்போது தெலுங்கில் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதில் புதிய சிக்கல் ஏற்பட்டு இருப்பதால் அது குறித்து படத்தை விநியோகம் செய்யும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது. தளபதி விஜயின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துவது போன்றே அப்படங்கள் வெளிவரும் சமயங்களில் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. எந்த மாதிரியான கதைக்களங்களில் தளபதி விஜயின் படங்கள் வந்தாலும் ஏதாவது சில காரணங்களுக்காக அது சார்ந்து ரிலீஸ் சமயத்தில் பூதாகரமாக சில சர்ச்சைகள் வெடிப்பது வழக்கமாகி வருகிறது.

இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக நாளுக்கு நாள் பெரும் ஹைப்பை கிளப்பிய தளபதி விஜயின் லியோ திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை அக்டோபர் 19ஆம் தேதி வெளிவருகிறது. முன்னதாக கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய படங்களில் இணைந்து நடித்த ரசிகர்களின் ஃபேவரட் PAIR-ஆன தளபதி விஜய் - திரிஷா ஜோடி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான அதிரடி ஆக்சன் நிறைந்த திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் CG உதவியோடு செய்யப்பட்டிருக்கும் கழுதைப்புலி ஆக்சன் காட்சி தியேட்டரில் பக்கா விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதுவரை எந்த தென்னிந்திய சினிமாவும் ரிலீஸ் ஆகாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக 25000 முதல் 30000 திரையரங்குகள் வரை லியோ படத்தை வெளியிடுவதற்காக படக்குழுவினர் விறுவிறுப்பாக பணியாற்றி வரும் நிலையில் தமிழ்நாட்டில் ரசிகர்களுக்கான அதிகாலை 4AM மணி சிறப்பு காட்சிக்காக தமிழ்நாடு அரசிடம் பட குழுவினர் அனுமதி கோரி காத்திருக்கின்றனர். இதனிடையே தெலுங்கில் லியோ திரைப்படத்தின் டைட்டில் தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்திருப்பதால் 20ம் தேதி வரை லியோ திரைப்படம் வெளிவருவதற்கு தடை விதிக்கப்படும் என தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தெலுங்கில் லியோ திரைப்படத்தை வெளியிடும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் பத்திரிகையாளர்களை அழைத்து இந்த சர்ச்சை குறித்து பதிலளித்து இருக்கிறது. அதன்படி இந்த டைட்டில் தொடர்பான சர்ச்சை வெகு விரைவில் பேசி முடிக்கப்படும் என்றும் சொன்னபடி 19-ம் தேதி லியோ படத்தை ரிலீஸ் செய்ய எல்லா பணிகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். வியோ திரைப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் குறித்த அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு இதோ…