தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் STR.கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.வெங்கட் பிரபுவின் மாநாடு,பத்துதல,கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படங்களில் நடித்து வருகிறார்.

இவரது மாநாடு படத்தின் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தினை கெளதம் மேனன் இயக்குகிறார்.இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சில்மபரசனின் அனைத்து பிரச்சனைகளும் சமீபத்தில் முடிவடைந்து அவருக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு சமீபத்தில் திரும்பப்பெறப்பட்டது.சில வருட இடைவேளைக்கு பிறகு சமூகவலைத்தளங்களில் இணைந்த சிம்பு அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார்.

தற்போது சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சிம்பு நடிக்கும் 48ஆவது படமான இந்த படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கின்றனர்.இதுகுறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

#VelsFilms Next with @SilambarasanTR_ !
Announcement Coming Tomorrow !

Produced by Dr @IshariKGanesh's @VelsFilmIntl #STR48 pic.twitter.com/7eGIAHjvlm

— Vels Film International (@VelsFilmIntl) September 17, 2021