தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.இவர் நடிப்பில் கடைசியாக மாநாடு படம் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து பத்துதல,வெந்து தணிந்தது காடு,கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

பத்து தல படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.கன்னடாவில் சூப்பர்ஹிட் அடித்த Mufti படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகி வருகிறது.ஓபுலி N கிருஷ்ணா இந்த படத்தினை இயக்கி வருகிறார்.ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசைமைத்து வருகிறார்.இந்த படத்தில் மற்றுமொரு நாயகனாக கெளதம் கார்த்திக் நடித்து வருகிறார்.

ப்ரியா பவானி ஷங்கர்,கலையரசன்,டீஜே உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சில கட்டங்களாக நடைபெறவுள்ளது.இறுதிக்கட்ட படப்பிடிப்பின் முதல் கட்டம் சமீபத்தில் நிறைவடைந்தது.இதனை தொடர்ந்து கர்நாடகா,நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது.கர்நாடகாவில் நடைபெற்று வந்த அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது என சில புகைப்படங்களுடன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

It’s a schedule wrap for #PathuThala#Atman pic.twitter.com/sWSdSkZvYF

— Silambarasan TR (@SilambarasanTR_) October 19, 2022

pic.twitter.com/5eB9CxU84H

— Reddin Kingsley (@KingsleyReddin) October 19, 2022

Schedule pack up STR pathu thalai pic.twitter.com/BpR6D9vfxG

— Reddin Kingsley (@KingsleyReddin) October 19, 2022