இந்த வாரத்தில் தமிழ் சினிமாவில் புது வரவாக வரும் மார்ச் 30 ம் தேதி வரவிருக்கும் மிக பெரிய திரைப்படம் ‘பத்து தல. சிலம்பரசன் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவான பத்து தல திரைப்படத்தை ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குனர் ஒபெலி கிருஷ்ணன் இயக்கியுள்ளார். முன்னதாக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கன்னியாகுமரியை கதைக்களமாக கொண்டிருக்கும் இப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி, கலையரசன், டிஜே அருணாச்சலம், முத்துகுமார், சென்றாயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இவர் இசையில் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு மும்முரமாக தொடங்கிய நிலையில் படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இறுதிகட்ட வேலையில் மிக முக்கியமானவை தணிக்கைக்கு படம் சென்று வருவது தான். சமூக நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் அல்லது பிரச்சனை உண்டாக்கும் காட்சிகள், வார்த்தைகளை படக்குழு நீக்குமாறு பரிந்துரை செய்யப்படும். அதன்படி பத்து தல திரைப்படத்திற்கும் தணிக்கை சான்று வெளியாகியுள்ளது. அதில் பத்து தல திரைப்படத்தில் 9 இடங்களில் சர்ச்சைக்குரிய கெட்டவார்த்தைகளை நீக்குமாறும் மேலும் ரத்தக்காட்சி மற்றும் தலையை துண்டிக்கும் காட்சிகளையும் மாற்றியமைக்குமாரும் பரிந்துரை செய்துள்ளது தணிக்கை குழு.

முன்னதாக பல இடங்களில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கட் செய்த பிறகு சிபிஎஃப்சி குழு பத்து தல படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.இப்படத்தின் தற்போது படத்தின் மொத்த ரன்னிங் டைம் 152.24 நிமிடங்கள் அதாவது 2.32.24 மணி நேரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியடப்பட்ட சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகின்றது.