தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வலம் வருகிறது. இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைக்காக தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த சிலம்பரசன். பின் உடலளவிலும் மனதளவில் மாற்றங்களை கொண்டு வந்து தற்போது பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதன்படி சிலம்பரசன் முன்னதாக நடித்து வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது சிலம்பாரசன் நடிப்பில் இயக்குனர் ஒபெலி கிருஷ்ணன் இயக்கிய ‘பத்து தல’ திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு உலகெங்கிலும் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மாபெரும் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் மணிரத்தினம் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுடன் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விழாவில் சிறப்பு விருந்தினராக உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் சிலம்பரசன் அவர்கள் கலந்து கொண்டு பேசியவை இணையத்தில் தற்போது பேசு பொருளாக உள்ளது. விழாவில் சிலம்பரசன் பேசியது,

"என் சினிமா வாழ்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த தருணம் அது. அப்போது செக்க சிவந்த வானம் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக மணிரத்னம் சாருக்காக நான் மிகவும் கடமைபட்டுள்ளே . அவரிடம் அப்போது நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார் சிலம்பரசன் TR.

பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் Multi Star திரைப்படமாக வெளியானது ‘செக்க சிவந்த வானம்’. இப்படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிலம்பரசன் மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபதிரங்களில் நடித்திருப்பார்கள் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஜெயசுதா, தியாகராஜன், அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருப்பார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் எ ஆர் ரகுமான் இசையமைத்திருப்பார். படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.