தென்னிந்தியாவின் குறிப்பிடதக்க நடிகர்களில் ஒருவராகவும் இளமை துள்ளும் நடிப்பின் மூலம் ரசிகர் கூட்டத்தை பல ஆண்டுகளாக தக்க வைத்து கொள்பவராகவும் இருந்து வருபவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவரானர் சித்தார்த். இவர் திரைப்பயணத்தில் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படமாக இருந்து வருவது ‘ஜில் ஜங் ஜக்’. கடந்த 2016 ல் வெளியான இப்படம் 2020 ல் நடைபெறும் நிகழ்வுகளை அட்டகாசமான திரைக்கதையுடன் கொடுத்திருக்கும் இப்படத்தில் நாயகனாக சித்தார்த் நடித்திருப்பார். மேலும் இவருடன் இணைந்து அவினாஷ், சனத் ரெட்டி, நாசர், ராதராவி உள்ளிட்டோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் திரைப்படமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் ரசிகர்கள் முன்னிலையில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை தனது திரைப்பயணம் சார்ந்து பகிர்ந்து கொண்டார். அதில் ரசிகர்கள் கொண்டாடும் ஜில் ஜங் ஜக்’ திரைப்படம் குறித்து கேட்கையில் அவர்,

“ஜில் ஜங் ஜக் படம் வெற்றி படம் இல்லைன்னு சொல்ல முடியாது.. இந்த படம் எனக்கு நல்லா காசு வந்துச்சு.. இந்த படம் எடுத்ததற்கு காரணம் இதுவரைக்கும் யாரும் எடுக்காத யாரும் பார்க்காத படம் எடுக்கனும் முயற்சி செய்த படம் ஜில் ஜங் ஜக். இந்த படம் முழுசா முடிக்க காரணம் அந்த படத்துடைய குழுவினர். 20 அறிமுக தொழில்நுட்ப கலைஞர்கள் அந்த படத்தில் பணியாற்றினார்கள். 'ஜில் ஜங் ஜக்' படம் 100 கோடி வசூல் செய்தா வெற்றி படம் கிடையாது. நம்ம சாவுற வரைக்கும் அந்த படம் பேசப்பட்டால் அதுதான் வெற்றி படம். ஜில் ஜங் ஜக் படத்திற்கு போஸ்டரே அடிக்கல.. அதுல பயணில்லை..

இந்த படத்தில் ஒவ்வொரு பாடலையும் ஒரு நட்சத்திரங்களை வெச்சு ரிலீஸ் செஞ்சோம். எனக்கு தெரிஞ்சு இந்த மாதிரி விஷயத்தை நாங்க தான் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திருக்கோம். நம்ம சரக்கை நம்மதான் விற்கனும் அது என்னோட நம்பிக்கை. என் படம், நான் தயாரிச்சதால இதை சொல்லல..‌ இந்த படத்துக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க.. ஜில் ஜங் ஜக் மாதிரி படங்களை நாங்கள் தைரியமாக எடுத்துட்டு இருப்போம். ஓடாது சொன்னாலும் அந்த படத்தை நாங்க எடுப்பேன்” என்றார் நடிகர் சித்தார்த்.

மேலும் நடிகர் சித்தார்த் அவர்கள் அவரது திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..