தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிபி சத்யராஜ். கடைசியாக நடிகர் சிபி சத்யராஜ் காவல்துறை அதிகாரியாக நடித்து வெளிவந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களான வால்டர் மற்றும் கபடதாரி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் வினோத் இயக்கியுள்ள ரங்கா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. மேலும் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் வட்டம் திரைப்படத்திலும் சிபி நடித்துள்ளார்.

இதனிடையே சிபி சத்யராஜின் ஆக்ஷன் ஃபேன்டசி த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ளது மாயோன் திரைப்படம். இயக்குனர் N.கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் உடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ஹரிஷ் பெரடி ஆகியோர் மாயோன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாயோன் படத்தை டபுள் மீனிங் புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் தயாரித்து, திரைக்கதையும் எழுதியிருக்கிறார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான மாயோன் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இந்நிலையில் மாயோன் படத்திற்கு சென்சாரில் U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாயோன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Happy to announce that #Maayon has been certified with a clean ‘U’ certificate without any cuts!Get ready to be captivated by the mysteries of #MaayonMalai @ManickamMozhi @DoubleMProd_ @ilaiyaraaja @DirKishore @RamprasadDop @tanyaraviOff @proyuvraaj @ksravikumardir pic.twitter.com/h6Uc4md6eT

— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) March 29, 2022