இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரை பிரபலம் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் பின்னணி பாடகியாக திரைக்கு அறிமுகமாகி பின் 2009 ல் வெளியான உன்னை போல் ஒருவன் படத்திற்கு இசையமைத்தார். பின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் ‘ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலே கவனம் பெற்ற ஸ்ருதி ஹாசன் 2012 ல் ஐஸ்வர்யா ரஜினி காந்த் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து ‘3’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

திரைக்கு நடிக்க வந்த சில ஆண்டுகளிலே தனக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி பின் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அஜித், விஜய் போன்ற நட்சத்திரங்களுடன் பணியாற்றினார். கொஞ்சம் காலமாக தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் படி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சங்கராந்தி விழாவையொட்டி பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி படமும் சிரஞ்சீவி நடித்துள்ள ‘வால்டர் வீரய்யா’ படமும் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களிலும் ஸ்ருதி ஹாசன் தான் கதாநாயகி. மேலும் கேஜிஎப் இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்திலும் நடத்து வருகிறார் ஸ்ருதி ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதி ஹாசன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் மனநல பிரச்சனைகளை எதிர்த்து போராடுவதும் அவற்றை சரி செய்வதும் எளிதான காரியம் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா படத்தின் பிரீ ரிலீஸ் – ல் ஸ்ருதி ஹாசன் கலந்து கொள்ளவில்லை. அவர் மனநல பிரச்சனையால் கலந்து கொள்ளவில்லை என்று பல வதந்திகள் அவர் உடல் நலன் குறித்து இணையத்தில் எழுந்தது. தான் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தான் விழாவில் கலந்துக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் சார்பில் அறிவித்து அவரை தொடர்ந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் அவர் மனநல பிரச்சனையில் இருப்பதாக கிளம்பிய வதந்திகளை ஸ்க்ரீன் ஷாட்டுகள் மூலம் சேகரித்து

தனது சமுக தளத்தில் பதிவிட்டார். அதனுடன் “நல்ல முயற்சி! நன்றி நான் எனது வைரஸ் காய்ச்சலில் இருந்து நலமாக மீண்டு வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்,

மேலும் அதனுடன் “நான் எப்போதும் ஒரு மனநல பிரச்சனையில் ஒரு தீர்வாளனாக இருப்பேன். எல்லா விஷயங்களிலிருந்தும் எண்ணக் கவனித்து கொள்வேன். அதையே நான் ஊக்குவித்து வருகிறேன். உங்களை முயற்சி நன்றாக உள்ளது. உங்களை கவனித்து கொள்ளுங்கள். முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகி பேசுங்கள்” என்று மேலும் காட்டமாக வதந்திக்கு பதிலடி கொடுத்தார்

இதனையடுத்து ஸ்ருதி ஹாசன் ரசிகர்கள் அந்த பதிவை வெகுவாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். மேலும் வைரஸ் காய்ச்சல் விரைவில் குணமடையவும் தங்களது ஆறுதல் வார்த்தைகளையும் தெரிவித்து வருகின்றனர்