மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி அசத்திவரும் படம் கைதி. இப்படம் முழுவதுமே இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் இதனை எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்துள்ளனர். இதில் கார்த்தியுடன் இணைந்து நரேன், ஜார்ஜ் மரியன், ரமணா, தீனா, தலைவாசல் விஜய், பொன்வண்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம்.சி.எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார்.

இப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சாந்தனு, அதிக எதிர்பார்ப்புகளுடன் சென்றேன் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு அமைந்தது கைதி திரைப்படம். கார்த்தியின் நடிப்பும் சாம்.சி.எஸ் இசையும் பிரமாதமாக இருந்தது என பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இயக்குனர் லோகேஷ் உடன் பணிபுரிவது பெருமையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். தளபதி 64 படத்திலும் சாந்தனு நடித்துவருகிறார் என்பது நாம் அறிந்தவையே.