ஷாருக்கான் இந்திய சினிமாவில் எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் முன்னணி நடிகராக அவதரித்தார்.தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர் சினிமாவுக்குள் நுழைந்து ரசிகர்கள் ஆதரவோடு முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகரென்ற பெருமையை பெற்றவர் இவர்.நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பு,ஸ்டண்ட் என்று அனைத்து துறைகளிலும் அடித்து நொறுக்கி வருகிறார்

கடந்த சில வருடங்களாக சில காரணங்களால் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஷாருக் கான் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.பதான்,ஜவான் என அடுத்தடுத்து இவர் நடிக்கும் படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.பதான் பட டீஸர் நேற்று வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பல்லாயிர கணக்கான ரசிகர்கள் இவரது வீட்டின் முன் குவிந்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களுடன் ஒரு வீடியோ எடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஷாருக் கான்.

The sea of love as I see it. Thank u all for being there and making this day ever so special. Gratitude…and only Love to you all. pic.twitter.com/IHbt4oOfYc

— Shah Rukh Khan (@iamsrk) November 3, 2022