பெருந்தொற்றில் வர்த்தக ரீதியாக அடிபட்ட இந்திய திரையுலகம் கடந்த ஆண்டுகளில் சில மொழி திரையுலகினர் பல வெற்றி படங்களை கொடுத்து மீண்டு வந்துள்ளனர். ஆனால் பாலிவுட் திரையுலகம் மட்டும் இன்னும் முழுதாக எழ முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்ப்பு கிளம்பி வந்த நிலையில் பாலிவுட் பரிதாபகரமான நிலையிலே இருந்து வருகிறது. படங்கள் திரைக்கு வந்தாலும் ரசிகர்கள் வரவேற்பு போதுமான அளவு இல்லாமலும் அப்படியும் வந்தாலும் படம் பெரிதளவு எடுபடாமலும் போய் விடுகிறது. இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் நிலையை மாற்ற ஷாருக் கான் படங்களால் மட்டும் தான் முடியும் என்று ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் எதிர்பார்த்தனர்.

இந்திய சினிமாவின் உச்ச நடிகரான பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் அவர்களின் திரைப்படமான ‘பதான் இன்று பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் உலகமெங்கும் வெளியானது. 2019 வெளியான ‘ஜீரோபடத்திற்கு பின் நான்கு ஆண்டுகள் கழித்து ஷாருக் கான் நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு இந்திய அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. பதான் திரைப்படத்தில் ஷாருக் கானுடன் இணைந்து தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்துள்ளனர்.

சர்ச்சைகளுகிடையே வெளியாகும் படம் என்பதால் ஒரு புறம் படத்தை எதிர்த்தும் ஒரு புறம் பெருவாரியாக வரவேற்றும் வருகின்றனர். நடிகர் ஷாருக் கான் படம் பிரச்சனை இல்லாமால் வெளியானால் தான் ஆச்சர்யம். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் ஷாருக் கானை இந்திய அளவு ரசிக்கும் ரசிகர்களின் அளவு குறையவில்லை. பதான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் உலகளவில் பதான் திரைப்படம் 100 நாடுகளில் திரையிடப்படுகிறது. இந்திய திரைப்படம் உலகளவில் இத்தனை நாடுகளில் திரையிடப்படுவது இதுவே முதல் முறை. தற்போது பதான் திரைப்படத்தின் முதல் காட்சி முடிந்த பின் மேலும் 300 காட்சிகளை விநியோகஸ்தர்கள் அதிகரித்துள்ளனர். அதன்படி உலகம் முழுதும் தற்போது ஏறத்தாழ 8000 திரைகளில் ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகிவுள்ள பதான் படத்திற்கு மும்முரமாக இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல இடங்களில் தொடர்ந்து முன் பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் பதான் திரைப்படத்தின் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. முதல் நாள் அதிக டிக்கெட்டுகள் விற்ற இந்தி மற்றும் இந்தி டப் திரைப்படங்கள் வரிசையில் பதான் திரைப்படம் 5.56 லட்சம் டிக்கெட்டுகள் விற்று இரண்டாவது இடம் வகிக்கிறது, ராஜமௌலியின் பாகுபலி 2 -6.60 லட்சம் டிக்கெட்டுகள் விற்று முன்னிலையில் உள்ளது. மூன்றாம் இடத்தில் 5.15 லட்சம் டிக்கெட்டுகள் விற்று கே.ஜி.எப் 2 திரைப்படம் உள்ளது. மேலும் முதல் நாள் 3 மணி நேர தகவலின் படி பதான் திரைப்படம் பிவிஆர் , ஐநாக்ஸ், சினிபோலிஸ் ஆகிய திரையரங்க நிறுவன சார்பில் மொத்தம் ரூ 20.35 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு முன்பு இந்த மூன்று நிறுவனங்களில் முதல் நாள் காட்சி வசூல் ரூ19.67 கோடி வசூல் செய்து ரித்திக் ரோஷனின் வார் திரைப்படம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளிலே இத்தனை வருட பாலிவுட் நிலையை மாற்றியதால் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் ஷாருக் கான் அவர்களையும் பதான் படக்குழுவினரையும் பாராட்டி வருகின்றனர். வரும் நாட்களில் பதான் உலகளவில் மிகப்பெரிய சாதனை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.