பொங்கலையொட்டி வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு கடந்த ஜனவரி 11ம் தேதி உலகெங்கிலும் வெளியானது. கோலாகல கொண்டாட்டங்களுடன் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வசூல் வேட்டையாடி வருகிறது.

தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பில் வம்சி பைடிபபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் குடும்பங்களின் உணர்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதில் தளபதி விஜயுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, ஷ்யாம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் பொங்கல் விடுமுறை நாட்களை குறிவைத்து வெளியானதால் படம் வெளியான அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்கள் பொதுமக்கள் திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர் வரை பொங்கல் விடுமுறையை தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்துடன் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு புறம் ரசிகர்கள் படத்தை புகழ்ந்து இணையத்தில் அதகளப்படுத்தி வருகின்றனர். மறுபுறம் படத்திற்கான வசூல் நிலவரங்கள் விநியோஸ்தர்கள் சார்பில் இணையத்தில் வெளியீட்டு வருகின்றனர். இதனிடையே படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய காட்சிகளையும் சுவாரஸ்யமான காட்சிகளையும் இணைத்து புது புது glimpse களை படக்குழு வெளியிட்டு ரசிகர்கள் ஆர்வத்தை ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமும் விநோயோகஸ்த நிறுவனமுமான seven screen studio படத்தின் புதிய glimpse ஐ வெளியிட்டுள்ளது.

திரையை தீப்பிடிக்க வைக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் ‘ஆட்டத்த பாக்குறியாபோன்ற வசனத்துடன் உள்ள வாரிசு திரைப்படத்தின் glimpse ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் வாரிசு படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்த கட்ட விளம்பர காட்சிகளை வெளியிட விருப்பதாகவும் விரைவில் பாடல் வெளியாக வாய்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.