தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஜீ தமிழின் முக்கிய தொடர்களில் ஒன்று கோகுலத்தில் சீதை இந்த தொடரின் நாயகனாக டான்ஸ் மாஸ்டர் நந்தா நடித்து வருகிறார்.இந்த தொடருக்கும் இவரது கதாபாத்திரத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது.

ஆஷா கௌடா இந்த தொடரில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இவருக்கும் தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.நளினி இந்த தொடரில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்,இவருடன் பல நட்சத்திரங்களும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக இந்த தொடர் சென்று வருகிறது.பல சுவாரசிய திருப்பங்களுடன் சென்று வரும் இந்த தொடரில் தற்போது செம்பருத்தி தொடரில் நடித்து பிரபலமான VJ கதிர் சிறப்பு தோற்றத்தில் புது என்ட்ரியாக இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.

View this post on Instagram

A post shared by Tamil Serials (@tamilserialexpress)