காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன்.கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான NGK படத்தினை இயக்கியிருந்தார்.இந்த படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் தனது சகோதரரும் நடிகருமான தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவலை நாம் முன்னரே தெரிவித்திருந்தோம்.இந்த படத்தை வி க்ரியேஷஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிப்பார் என்றும் தகவல்கள் கிடைத்தன.

தற்போது செல்வராகவன் தனது புதிய படத்திற்கான கதை வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது தனுஷ் நடிக்கும் படமா அல்லது ஏதேனும் புதிய படமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Screenplay Writing...no greater pleasure !! Absolute peace 🤓🤓🤓🤓 pic.twitter.com/LVNysgcXgm

— selvaraghavan (@selvaraghavan) November 6, 2019