தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷான் ரோல்டன் துல்கர் சல்மானின் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து இவரது இசையில் வெளிவந்த சதுரங்க வேட்டை, முண்டாசுப்பட்டி, 144, ஜோக்கர் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் அனைராலும் கவனிக்கப்பட்டன.

மேலும் நடிகர் தனுஷ் இயக்குனராக களமிறங்கிய பவர் பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2. மெஹந்தி சர்க்கஸ் என அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து வரும் ஷான் ரோல்டன் கடைசியாக கடந்த ஆண்டு சூர்யா தயாரித்து நடித்து வெளிவந்த ஜெய்பீம் படத்திற்கும் இசையமைத்தார்.

உலக அளவில் பாராட்டுகளைப் பெற்று வரும் ஜெய்பீம் திரைப்படத்தில் ஷான் ரோல்டனின் இசையும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனிடையே ஷான் ரோல்டன் இசை அமைக்கும் புதிய பறை ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. திங்க் ஒரிஜினல் வழங்கும் பறை ஆல்பம் பாடலை இயக்குனர் குமரன் இயக்கியுள்ளார்.

ஸ்ரீதர் மற்றும் அர்ஜுன் ராஜா இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ள பறை பாடலை G.லோகன் மற்றும் ஷான் ரோல்டன் இணைந்து எழுதியுள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து பாடி நடித்துள்ள இந்த பறை பாடல் வருகிற மார்ச் 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள பறை பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

Unveiling the powerful first look of #Parai Coming out soon on #ThinkOriginals #Paraifirstlook @DirKumaran @Dhanalakshmi251 @thinkmusicindia @EditorSelva @Sridhar_DOP @ArjunrajaDft #Logan @sridirect @saishravanam @vijaymp29 @oodagaa @GurubhagavanP @SureshChandraa @ProRekha pic.twitter.com/8lLZYkFJwV

— Sean Roldan (@RSeanRoldan) February 25, 2022