விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வெற்றிகரமான தொடர்களில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த தொடரின் இரண்டாவது சீசனில் பிரபல மாடலும் நடிகையுமான பவித்ரா லக்ஷ்மி பபங்கேற்று அசத்தியிருந்தார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பவித்ரா.குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் பவித்ரா.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சில குறும்படங்கள்,ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்திருந்தார் பவித்ரா.மேலும் உல்லாசம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தும் அசத்தியுள்ளார் பவித்ரா.உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று அசத்தியிருந்தார்.மேலும் மிஸ் மெட்ராஸ் போன்ற சில பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார் பவித்ரா.

தமிழில் ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் ஒரு படம்,கதிர் ஹீரோவாக நடிக்கும் படம் என சில படங்களில் நடித்து வருகிறார் பவித்ரா.ஏஜி எஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் காமெடி நடிகர் சதிஷ் ஹீரோவாகி நடிக்கிறார்.கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அஜீஸ் அசோக் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஒரு பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.நாய் சேகர் என்று இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்

வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி🙏@actorsathish உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள்,படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்😊Best wishes to @archanakalpathi @itspavitralaksh dir @KishoreRajkumar &entire team for a great success👍😊 pic.twitter.com/4ScNWKsxxG

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 16, 2021