தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் நகைச்சுவை நடிகராக திகழ்ந்த நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாகவும் நகைச்சுவையை மையப்படுத்திய பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக தெலுங்கில் ஸ்பை த்ரில்லர் நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடித்துள்ளார்.

ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற பெயரில் இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் தயாராகியுள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து மேயாதமான் & ஆடை என தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த படங்களை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் குலு குலு திரைப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். குலு குலு திரைப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது

சந்தானத்துடன் இணைந்து குலு குலு படத்தில் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குலு குலு படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

இயக்குனர் ரத்ன குமாரின் பாணியில் கலக்கலான என்டர்டெய்னிங் திரைப்படமாக தயாராகியிருக்கும் குலு குலு திரைப்படத்தின் கலக்கலான மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது குலு குலு திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சந்தானம் தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ரத்தினகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தானம் டப்பிங் ஸ்டூடியோவில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். விரைவில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#GuluGulu Dubbing starts from Today🎙️🎧. pic.twitter.com/DfA5aANBna

— Rathna kumar (@MrRathna) March 23, 2022