தமிழ் திரை உலகில் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் ரத்னகுமார் தனது மேயாதமான் & ஆடை ஆகிய இரண்டு திரைப்படங்களின் வாயிலாக தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர். மேலும் நலுல திரைக்கதை ஆசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் கலக்கி வருகிறார்.

குறிப்பாக தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை மற்றும் வசனங்களில் ரத்னகுமார் பணியாற்றியுள்ளார்.

இந்த வரிசையில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் குலுகுலு. முன்னணி நகைச்சுவை நாயகனாக திகழ்ந்த நடிகர் சந்தானம் நடிப்பில் கலகலப்பான காமெடி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் குலுகுலு திரைப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

சந்தானத்துடன் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் குலு குலு படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட வருகிற ஜூலை 29-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள, குலுகுலு திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முன்னதாக குலுகுலு படத்தில் இருந்து வெளிவந்த மாட்னா காலி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் குலுகுலு திரைப்படத்தின் அடுத்த பாடலாக அன்பரே பாடல் தற்போது வெளியானது. ரம்மியமான அந்த அன்பரே பாடல் இதோ…