தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து நட்சத்திர காமெடியனாக வலம் வந்த நடிகர் சந்தானம் தொடர்ந்து தற்போது கதாநாயகனாகவும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டில் சந்தானம் நடிப்பில் குலுகுலு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் ஆகிய படங்கள் வெளிவந்தன.

அடுத்ததாக முதல் முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கும் AK62 திரைப்படத்தில் சந்தானம் முக்கிய வருடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சந்தானம் நடிப்பில் அடுத்த படமாக வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் கிக்.

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கிக் திரைப்படம் சந்தானத்தின் திரைப்பயணத்தில் ஹீரோவாக 15வது திரைப்படமாகும். கிக் திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து தன்யா போப் கதாநாயகியாக நடிக்க, தம்பி ராமையா, ராகினி திவேதி, கோவை சரளா, ப்ரம்மானந்தம், செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கலகலப்பான காமெடி என்டர்டெய்னராக ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிப்பில் தயாராகியிருக்கும் கிக் திரைப்படத்திற்கு, சுதாகர்.S.ராஜ் ஒளிப்பதிவில், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்ய அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். கிக் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகினறன.

இந்நிலையில் கிக் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் கிக் படத்தின் அசத்தலான மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த மேக்கிங் வீடியோ இதோ…