பிரபல நகைச்சுவை நடிகராக தென்னிந்திய திரையுலகில் வலம் வந்த நடிகர் சந்தானம். தனக்கென தனி பாணியை தேர்ந்தெடுத்து நகைச்சுவை கதைகளத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அதன்படி பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன்படி அவரது நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, டக்கால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை அளித்தது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம். ரசிகர்களின் ஆதரவினால் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக வளர்ந்தார்.. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான குளுகுளு, எஜன்ட் கண்ணாயிரம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிதளவு வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை. இருந்தாலும் தனித்துவமான நகைச்சுவை கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடிகர் சந்தனம் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது சந்தானம் நடிப்பில் ‘கிக்’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. மேலும் நல்ல கதாபாத்திரம் கொண்ட திரைப்படங்கள் வந்தால் மீண்டும் நகைச்சுவை நடிகனாகவும் நடிக்க தயார் என்றும் முன்னதாக குறிப்பிட்டு இருந்தார்.

இதனிடையே நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘DD ரிட்டர்ன்ஸ்’. இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ஹாரர் – காமெடி கதைகளத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தானதிற்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி, இவன் வேற மாதிரி பட நடிகை சுரபி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரெட்டின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவட், மசூம் ஷங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், தீனா, விபின், தங்கதுரை, தீபா, சைதை சேது மற்றும் மானசி உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்கே என்டர்டைன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் C.ரமேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் பிரபல சுயாதீன ஆல்பம் இசையமைப்பாளர் OFRO இசை அமைத்திருக்கிறார். சாண்டி மாஸ்டர் படத்திற்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

முன்னதாக இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி வரும் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளது. சந்தானம் நடிப்பில் முன்னதாக ஹாரர் கதைகளத்தில் தில்லுக்கு துட்டு 1,2 வெளியாகி மிகபெரிய ஹிட் அடித்தது. அதன் வரிசையில் DD Returns திரைப்படமும் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் DD returns உருவான விதம் குறித்து பட குழுவினர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

படம் குறித்து இயக்குனர் பிரேம் ஆனந்த் அவர்கள் பேசுகையில். " இந்த படம் பல பேருடைய கடின உழைப்பு.. கதை எழுதும் போதே ஒரு முடிவு பண்ணோம். இந்த படத்துல பேய் பழி வாங்க கூடாது. பேய் விரட்ட சாமியார் வரக்கூடாது. எதுலாம் ஏற்கனவே வந்ததோ அதையெல்லாம் பண்ணவே கூடாது னு நினைச்சேன்.. அதனால் பேய் விளையாட்டு போட்டி வைக்குறா மாதிரி யோசிச்சோம்." என்றார் இயக்குனர் பிரேம் ஆனந்த் மேலும் தொடர்ந்து படத்தின் சிறப்பு காட்சி வடிவமைப்பாளர் (VFX) செந்தில் பேசுகையில், "கதையில் புதுசா ஒண்ணு முயற்சி செய்யனும்னு இயக்குனர் கேட்டார்.2000 ஷாட் ஒரே மாதிரி வரனும் னு சொன்னார். அது அளவு கடந்த CG வேலை. எனக்கு தெரிந்து தமிழ் ல யாருமே இந்த மாதிரி ஒரு முயற்சி எடுக்கல.." என்றார்.

மேலும் தொடர்ந்து படக்குழுவினர் சந்தானத்தின் DD returns படம் உருவான விதம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..