விஜய் டிவியின் காமெடியனாக இருந்து பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் ஒருவராக அவதரித்தவர் சந்தானம்.முன்னணி காமெடியனாக உயர்ந்த பின்னர் கதாநாயகனாகவும் உருவெடுத்தார் சந்தானம்.ஹீரோவாக இவர் நடித்த படங்களும் ஹிட் அடித்தன.

இவர் அடுத்ததாக ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.தெலுங்கில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் ஏஜென்ட் சாய்ஸ்ரீநிவாஸா ஆத்ரேயா.இந்த படத்தின் ரீமேக் தான் ஏஜென்ட் கண்ணாயிரம்.மனோஜ் பீதா இந்த படத்தினை இயக்குகிறார்.Labrynth Films நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ரியா சுமன்,புகழ்,ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தீம் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

#AgentKannayiram @iamsanthanam’s Wacky Investigation to start from Nov 25th in theatres!

From the Director of #VanjagarUlagam @manojbeedha_dir
A @thisisysr Musical#AgentKannayiramFromNov25 @LabyrinthFilms_ @IRiyaSuman @VijaytvpugazhO @thinkmusicindia pic.twitter.com/rnJck9r9ZR

— Done Channel (@DoneChannel1) October 26, 2022