விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருக்கிறார்.ஆல்யா மானசா கர்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் சஞ்சீவ் அறிவித்தார்.இதனை தொடர்ந்து தற்போது இவரது வளைகாப்பு புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.சஞ்சீவ்-ஆல்யா இருவருக்கும் கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.