உள்ளங்கைகளில் இணையதளம் குடியேறுவதற்கு முன்பே சினிமாவை பல கோணங்களில் ஆராய்ந்து இணையத்தின் வழியாக உள்ளங்களில் சேர்த்த பெருமை கலாட்டாவையே சேரும். பத்தொன்பது ஆண்டு கலாட்டா வரலாற்றில் அயராது கலைத்துறையின் மகிமையை உலகிற்கு பறைசாற்றி மகிழ்ச்சி கண்டோம்.



திரைத்துறையில் அயராமல் உழைத்து சாதனை நிகழ்த்தும் புரட்சிப் பெண்களை அங்கீகரித்து கலாட்டா ஒண்டர் வுமன் விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்தது.இந்த விருது விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



திரைத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்திய பெண்மணிகளை பாராட்டி அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.80-துகளில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர்களில் தொடங்கி தற்போது இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருக்கும் நடிகைகள் வரை பல நட்சத்திரங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



சிறப்பு விருந்தினராக தளபதி விஜயின் மனைவி சங்கீதா விஜய் கலந்துகொண்டு முடிசூடா தளபதி என்னும் விருதை பெற்றார்.இந்த விருதை நடிகை சிம்ரன் சங்கீதா விஜய்க்கு அளித்தார்.விருதினை பெற்றுக்கொண்ட சங்கீதா விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்