தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார் சமந்தா.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.

இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா.அடுத்ததாக சகுந்தலம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல்,Dream Warrior Pictures தயாரிப்பில் ஒரு படம்,யசோதா என பிஸியாக உள்ளார் சமந்தா.

இவற்றை தவிர முதன்முறையாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா,இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.இவற்றை தவிர இவர் ஒரு ஆங்கில படத்திலும் நடிக்கினார்.Arrangement of Love என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது.

சாகுந்தலம் படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.குணசேகர் இந்த படத்தினை இயக்கியுள்ளார்,மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் தற்போது நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என்று ஒரு மோஷன் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.

Witness the #EpicLoveStory #Shaakuntalam in Theatres from Nov 4th 2022 Worldwide!#ShaakuntalamOnNov4https://t.co/hU4xSobAH3 @Gunasekhar1 @Samanthaprabhu2 @ActorDevMohan #ManiSharma @neelima_guna @GunaaTeamworks @SVC_official @neeta_lulla @tipsofficial #MythologyforMilennials pic.twitter.com/zimNwKcEii

— Sri Venkateswara Creations (@SVC_official) September 23, 2022