தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகை சமந்தா. தமிழ் தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. திரை நட்சத்திரங்களுடன் கதாநாயகியாக ஒருபுறம் நடித்தாலும் அதே நேரத்தில் கதையை மையப்படுத்தி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி ‘ஒ பேபி’, ‘யூடர்ன்’, ‘யசோதா ஆகிய திரைப்படங்கள் மிகபெரிய அளவு வரவேற்பு பெற்றது. அதே நேரத்தில் தற்போது சமந்தா இந்தியில் ‘சிடாடேல் இணைய தொடரிலும் தெலுங்கில் ‘குஷி’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா வுடன் நடித்து வருகின்றார். சமந்தா தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் முன்னாதாக வெளியான இந்தி தொடரான ‘தி பேமிலி மேன்2’ தொடர் மூலம் மிகப்பெரிய வரவேற்பினை பாலிவுட்டிலும் பெற்றார். தற்போது சமந்தா இந்தியா முழுவதும் பிரபலாமாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவான ‘சாகுந்தலம்’ வரும் ஏப்ரல் 14 வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக நமது கலாட்டா தமிழ் மீடியாவிற்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் சமந்தா கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதில் சமந்தா மையோசிடிஸ் என்ற தசை சார்ந்த அறிய நோயினால் பாதிக்கப்பட்டதும் அதிலிருந்து மீள அவர் எடுத்துக் கொள்ளும் சிகிச்சை குறித்தும் மனம் திறந்து பேசினார். அவர் பேசியவை.

"Auto immune நிலை இருக்கும் சில பேர்களிடம் சரியாகிட்டிங்களா னு கேட்க முடியாது. அது வாழ்நாள் முழுதும் இருக்கும். அவங்களுக்கு நல்ல நாட்களும் இருக்கும்.. கெட்ட நாட்களும் மட்டும்தான் இருக்கும். அதனால் இப்போது எனக்கு நல்ல நாட்கள் தான் உள்ளது. என்றார். மேலும் "நான் வீட்ல இருக்கும்போது மருத்துவமனையில் இருக்கும் போது அங்க சரியாகிடுவேன் னு டாக்டர்கள் நினைச்சாங்க. ஆனா நான் அதிகம் விரும்பும் படப்படிப்பில் இருக்கும்போது அதிலிருந்து மீண்டு வர நிறைய நேரம் உதவுகிறது. அது தான் தனி வலிமை.. எனக்கு அது பயங்கரமான வலிமையை கொடுக்கிறது. எனக்கு வீட்ல இருக்கும் போது நிறைய வேலைகள் செய்ய முடியாது. தற்போது நான் 'சிடாடெல்' தொடரில் ஆக்ஷன் செய்து விட்டு பின் 'குஷி' படத்தில் படத்தில் நடிக்கிறேன் இதுமட்டுமல்லாமல் 'சாகுந்தலம்' விளம்பரத்திலும் இருக்கிறேன். எனக்கு தெரியல இந்த வலிமை எங்கிருந்து வருதுனு தெரியல..

நான் என் வாழ்க்கையை நிறைய வரையறை செய்து வைத்து வாழ்பவள் நிறைய நான் நினைச்சது போல் தான் நடக்கும். ஆனால் இந்த பிரச்சனை இருக்கு ன்னு கண்டறியும் போது நான் கோபப்பட்டேன். இது ஏன் எனக்கு வந்தது? ஏன் போக மாட்டேங்குது? என்ற நிறைய கேள்வி இருந்தது. முதல் சில மாதங்களுக்கு நான் மன அழுத்தமும் கோபமும் இருந்தது‌. நான் நல்லதை சாப்பிடுகிறேன். நல்ல உடற்பயிற்சி செய்கிறேன்.. ஆரோக்கியமா இருக்கேன்.. எனக்கு ஏன் இது வந்தது? ஏன் போக மாட்டேங்குது.. நான் என்ன செஞ்சாலும் போகமாட்டேங்குது.‌.

அதன்பின் அது எனக்கு பொறுமையை சொல்லிக் கொடுத்தது. எல்லாமே முழுமையாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்திருந்தேன். ஆனால் அந்த முழுமையானது எப்போதும் இருக்காது என்று தெரிய வந்தது. இன்று என்ன பண்றோம்.. நம் எந்த நிலையில் இன்று இருக்கிறோம் என்பதை கருத்தில் கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும். எனக்கு பிடிச்ச படத்தை நான் விளம்பரம் செய்கிறேன் அதுவே எனக்கு முழுமையாக உள்ளது. இதன்மூலம் முழுமைக்கான அர்த்தத்தை நான் மாற்றிக் கொண்டேன்.” என்றார்.

மேலும் சமந்தா சாகுந்தலம் திரைப்படம் குறித்தும் அவரது திரைப்பயணம் குறித்தும் நடிகை சமந்தா பகிர்ந்து கொண்ட வீடியோ இதோ..