மானாட மயிலாட உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று அடுத்ததாக ப்ரேமம் படத்தின் மூலம் தென் இந்தியாவின் Favourite நடிகையானவர் சாய் பல்லவி.நடிப்பு,நடனம் என என்னவாக இருந்தாலும் அடிச்சு தூள் கிளம்புவார் சாய் பல்லவி.தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த இவர்,இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.தியா படத்தின் மூலம் தமிழில்அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான NGK,தனுஷ் நடிப்பில் மாரி 2 என்று தமிழிலும் பெரிய ஹீரோக்களுடன் இணைந்து அசத்தினார்.மாரி 2 படத்தில் இடம்பெற்ற Rowdy Baby பாடலில் இவரது நடனத்தை பாராட்டாதவர் எவரும் இருக்க மாட்டார்கள்.இதனை தொடர்ந்து சில முக்கிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 21 படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்கிறார்.

தமிழ்,தெலுங்கு,கன்னடம் மொழிகளில் தயாராகி வரும் கார்கி படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தினை ரிச்சி பட இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார்,கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியுள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Very Happy to announce that we have acquired the Prestigious project #Gargi entire TN Theatrical rights.#Gargi #கார்கி @Sai_Pallavi92 @prgautham83 #AishwaryaLekshmi @sakthivelan_b @sraiyanti @premakkattu @ThomaGeorge80 #govindvasantha @kaaliactor @urkumaresanpro pic.twitter.com/HbihVNQN3n

— Sakthi Film Factory (@SakthiFilmFctry) June 8, 2022