ty சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் ஷாம்பவி குருமூர்த்தி.குழந்தை நட்சத்திரமாக சன் டிவி சீரியலில் நடித்த இவர் பின்னர் சில வருடங்கள் கழித்து தாமரை என்ற தொடரில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார் ஷாம்பவி.

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா தொடரில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தார்.அடுத்ததாக தெலுங்கில் மல்லேஸ்வரி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்தார் இந்த சீரியல் செம ஹிட் அடிக்க தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகையாக மாறினார் ஷாம்பவி.இதனை தொடர்ந்து சில சூப்பர்ஹிட் தெலுங்கு தொடர்களில் நடித்துள்ளார் ஷாம்பவி.

சன் டிவியின் செம ஹிட் தொடரான கண்மணி தொடரில் இரண்டாவது நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவராக மாறினார் ஷாம்பவி.இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.இவற்றை தவிர சில படங்களிலும் நடித்துள்ளார் ஷாம்பவி.சமீபத்தில் தெலுங்கில் தொடங்கிய சாதனா தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார் ஷாம்பவி.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார் ஷாம்பவி.கடந்த பிப்ரவரி மாதம் தனது காதலன் பிரசன்னாவை கரம்பிடித்தார்.தற்போது தொகுப்பாளராக புது அவதாரம் எடுக்கிறார் ஷாம்பவி.சன் டிவியின் காலை வேளையில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா தொடரில் இனி ஷாம்பவியும் அவ்வப்போது ஒரு தொகுப்பாளராக வந்து அசத்தப்போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவரது இந்த புது முயற்சி வெற்றிபெற ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.