1981 ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். விஜயகாந்தின் ஆஸ்தான இயக்குனர் என்ற பெயர் பெற்றவர். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் சந்திரசேகர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவர் தனது 70 வது படமான ‘நான் கடவுள் இல்லை’ படம் வரும் பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நமது கலாட்ட தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டார்.

தன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்த நடிகர் விஜயகாந்த் குறித்து பேசியிருந்தார்
அவர், “வாத்தியார் அம்மாவின் குடும்பத்தில் இருந்து வந்ததுனாலோ என்னவோ தெரியவில்லை , ஒரு மாணவனிடம் என்ன உள்ளதோ அதை வெளிக்கொண்டு வருவது தான் ஆசிரியரின் கடமை. அந்தவகையில் விஜயகாந்தை நான் புரிந்துகொண்டபோது அவரின் சாராம்சம் , இயக்கையாகவே அவருக்கு கண்கள் அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் .கோவத்தை காட்டும் நேரங்களில் நெருப்பு போல் ஆகி விடுவார்.இப்போது தான் என்னமோ கண்களுக்கு உபயோகிக்கிறார்கள். ஆனால் அவர் சிறிது நேரம் உக்காந்திருப்பார் . நிமிர்ந்து பார்த்தால் கண்கள் சிவந்து இருக்கும் . அதேபோல் நிஜமாகவே பத்து பேரை அடிப்பார். அதை நான் நேரில் அனுபவித்துள்ளேன். ‘சாட்சி’ படத்திற்கு பிறகு நானும் அவரும் வெளியே செல்வோம் . என்னை பாதுகாப்புடன் அழைத்துச்செல்வார். யாராவது வந்தால் அவர் தள்ளிவிடுவார். அப்படி தள்ளிவிட்டால் இரண்டு புறமும் பத்து பேர் கீழே விழுவார்கள். சரி இவரை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றலாம் என்று நினைத்தேன். முதலில் ஒரு காதல் கதை நடித்தார் அது வெளிவரவில்லை. பிறகு நான் பார்த்தேன். அவர் முரட்டுத்தனமாக காட்சியளிப்பார். இவரை வேறுவிதமாக காட்டலாம் என்று நினைத்தேன். அவர் வீட்டில் எப்படி நடந்துகொள்வார் அக்காவிடம் எப்படி நடந்துகொள்வார் என்று பார்த்து 'சட்டம் ஒரு இருட்டறையில் ' அப்படி தான் பண்ணேன். அவருடைய நடவடிக்கையை புரிந்துகொண்டு என் கதாபாத்திரத்தை சிறிது அவருக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டேன் .” என்று குறிப்பிட்டார்.