தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக அடுத்தடுத்து பிரம்மாண்ட படைப்புகளை தயாரித்து வரும் தயாரிப்பாளர் DVV.தனயா அவர்களின் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் RRR. நட்சத்திர இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பிரம்மிப்பான படைப்பாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள RRR திரைப்படம் உலக அளவில் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு RRR படத்தின் சூப்பர் ஹிட் பாடலான நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் MM.கீரவாணி அவர்கள் கோல்டன் குளோப் விருது வென்றார்.

இந்த வரிசையில் DVV தனயா தயாரிக்கும் அடுத்த பிரம்மாண்ட படமாக தயாராகிறது OG. தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் OG திரைப்படத்தை நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாகோ திரைப்படத்தின் இயக்குனர் சுஜித் இயக்குகிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.K.சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் OG திரைப்படத்தின் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக OG திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலாகலமான பட பூஜை உடன் தொடங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த படப்பூஜை புகைப்படங்கள் இதோ…

#FireStormIsComing 💥 pic.twitter.com/UeKACqtmS7

— DVV Entertainment (@DVVMovies) January 30, 2023