சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வரும் வரும் பிரபல தொடர்களில் ஒன்று ரோஜா.ப்ரியங்கா நல்காரி இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சிபு சூரியன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.வடிவுக்கரசி,அக்ஷயா,பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் ப்ரியங்கா மற்றும் சிபு சூரியன் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ஆதரவோடு 900 எபிசோடுகளை கடந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.பல சுவாரசிய திருப்பு முனைகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று வருகிறது.

இந்த தொடரில் முக்கிய வில்லியாக நடித்து அசத்தி வரும் ஷாமிலி சுகுமார் கர்பமாக இருப்பதால் இந்த தொடரில் இருந்து விலகினார்.இவருக்கு பதிலாக சன் மியூஸிக்கில் பிரபல தொகுப்பாளியாக அசத்திய அக்ஷயா நடித்து அசத்தி வருகிறார்.

பல திருப்பங்களுடன் சென்று வரும் இந்த தொடரில் தற்போது பிரபல நடிகையான நளினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.இதுகுறித்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.சில வருடங்களுக்கு பிறகு இவர் சன் டிவிக்கு மீண்டும் வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

View this post on Instagram

A post shared by Nalini Nair (@nalini.nair.official)