சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ள படம் ஆர்.கே.நகர். இந்தப் படத்தில் வைபவுக்கு ஜோடியாக அல்தாஃப் நடித்துள்ளார். பிரேம்ஜி இசையமைத்துள்ளார். பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட் மற்றும் ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் உருவாகியிருந்த இந்தப் படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது.

தேர்தல் சமயத்தில் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று கூறி ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக சமீபத்தில் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் திரைக்கு வராமல் டிஜிட்டல் தளத்தில் வந்ததால் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர் திரை ரசிகர்கள்.

இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ராகவா லாரன்ஸை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மாநாடு திரைப்படம் உள்ளது.