பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.



LKG படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது என்ற தகவல் கிடைத்திருந்தது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.



இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை RJ பாலாஜி நேற்று இந்தியா-பங்களாதேஷ் போட்டியில் வெளியிட்டார்.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளதாகவும்.நயன்தாரா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.இந்த படம் சம்மர் 2020-ல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

And here it is - Mookuthi Amman ! Starring the Lady Superstar Nayanthara..! Produced by Vels Film International.! I’ve written the story,screenplay, dialogues and directing it with NJ Saravanan.! #Summer2020 release.! ❤️#MookuthiAmman 🙏 pic.twitter.com/0YYmbI87lm

— RJ Balaji (@RJ_Balaji) November 10, 2019