வித்யாசமான கதைகளத்தில் முதல் முதலாக ஆர் ஜே பாலாஜி திரில்லர் கதைக் களத்தில் நடித்து திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய திரைப்படம் ‘ரன் பேபி ரன்இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் ராதிகா சரத்குமார், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 3 தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் ஆர் ஜே பாலாஜியின் ரன் பேபி ரன் திரைப்படத்திற்காக படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஏற்பாடு செய்திருந்தனர். இதில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் படத்தின் நடிகர் ஆர் ஜே பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இந்த வாரம் நிறைய படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்களில் தனித்து எப்படி உங்களால் தெரிய முடிந்தது என்ற கேள்விக்கு,

"பண்டிகை நாட்களில் பெரிய படங்கள் வருகிறது. இது போன்ற வாரங்களில் தான் சின்ன சின்ன படங்கள் வருகிறது. அதனால் தான் ஒரு வாரத்தில் 7 படங்கள். ஆயிரம் திரைகள் தான் இருக்கு. இந்த நிலையில் எது முக்கியம் என்றால், படம் எடுத்தாச்சு வெளியிட்டாச்சுனு இல்லாமல் இது மாதிரி படம் வரது னு தெரியப்படுத்தனும். அதுதான் முக்கியம் னு நினைக்குறேன். மேலும் இந்த மாதிரி நேரத்தில் நான் இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். நான் ‘வீட்ல விஷேசம்’ படத்தின் போது செய்த விளம்பரங்கள், இப்போ இந்த படத்திற்கு செய்த விளம்பரங்கள் எல்லாம் பார்த்துட்டு மற்ற படங்கள் எல்லாம் எங்க கிட்ட வந்து கேட்டாங்க.. இது போன்ற விளம்பரங்கள் வேற என்ன செய்யலாம் எங்க படத்துக்கு னு..‌ இந்த விளம்பரங்களையெல்லாம் என்னோட படங்களுக்கு நான் நட்பு ரீதியாக செய்து வந்தேன். ஆனால் நான் இதை விரிவுப்படுத்த விரும்புகிறேன். சின்ன படங்களுக்கு விளம்பரம் தேவை அதை செய்வதற்காக நான் ஈடுபடவிருக்கிறேன். வித்யாசமான விளம்பரங்களை காசு சம்பாதிக்கும் நோக்கத்தில் இல்லாமல் என்னால்‌ முடிந்த விளம்பரங்களை சின்ன படங்களுக்கும் செய்யவிருக்கிறேன். எனவே நான் ஒரு promotional Company துவங்கவிருங்கிறேன். இனி எத்தனை படம் வெளியானாலும் பார்வையாளர்களுக்கு அந்த படம் போய் சேருதான்றது தான் கேள்வி. விளம்பரம் செய்ததால் தான் ரன் பேபி ரன் பெரும்பாலான மக்களுக்கு கொண்டு சேர்ந்தது.” என்றார்.

ஆர் ஜே பாலாஜி ரேடியோவில் ஆர் ஜே வாக மட்டுமல்லாமல், தொகுப்பாளராகவும் கிரிக்கெட் வருனனையாளராகாவும், நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும், இயக்குனராகவும் பல அவதாராங்களை பார்த்து உள்ளோம், இவரது வித்யாசமான விளம்பரங்கள் அதிகம் பேசப்பட்டதால் தற்போது திரைப்படங்கள் விளம்பரம் செய்யவும் களம் இறங்கவுள்ளார். விரைவில் இது சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கலாம்.