பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கி தற்போது ஹீரோவாக உருவெடுத்து நிற்பவர் ரியோ ராஜ்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து அதர்வா நடித்த பாணா காத்தாடி,செம போத ஆகாத உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் ரியோ ஹீரோவாக நடிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தை பாசிட்டிவ் ப்ரிண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் ஹீரோயினாக சேதுபதி படத்தில் ஹீரோயினாக நடித்த ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The shining stars of our film! Very happy to introduce our hero @rio_raj and heroine @nambessan_ramya on board #YuvanBadri3 🎥 With these two wonderful performers, our excitement has just increased manifold! 🤩@dirbadri @thisisysr @karnamurthyac @sinthanl @DoneChannel1 pic.twitter.com/mzEUFNKmTu

— Positive Print Studios (@positiveprint_) October 14, 2019