பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கி தற்போது ஹீரோவாக உருவெடுத்து நிற்பவர் ரியோ ராஜ்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் ரியோ ஹீரோவாக நடிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை பாசிட்டிவ் ப்ரிண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

பாலசரவணன்,முனீஷ்காந்த்,ரோபோ ஷங்கர்,ஆடுகளம் நரேன்,விஜி சந்திரசேகர்,சந்தான பாரதி,எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது என்றும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

#YuvanBadri3 Shoot wrapped up successfully. It was such a fun team to work with. Oru naal rendu naal illa, Ella naalum aattam dhan @rio_raj @nambessan_ramya @dirbadri @thisisysr @karnamurthyac @Rajeshnvc5Kumar @RogerSatinwhite @SinthanL @ActorRoboSankar @ActorViji @Bala_actor pic.twitter.com/3EiEWRzxdD

— Positive Print Studios (@positiveprint_) January 4, 2020