ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா.டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று பூவே பூச்சூடவா தொடரின் ஹீரோயினாக உருவெடுத்வர் ரேஷ்மா.சீரியலிலும் தனது நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன் பாண்டியனை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தொடரின் நாயகி ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டு அன்று தெரிவித்திருந்தார்.இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பூவே பூச்சூடவா தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில்.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் தொடரில் ரேஷ்மா ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த தொடரில் நாயகனாக ரேஷ்மாவை திருமணம் செய்துகொள்ள இருக்கும் மதன் நடிக்கிறார்.

இந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இவர்களுக்கு நாளை நவம்பர் 15ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது,இதற்கு முந்தைய நிகழ்ச்சியான மெஹந்தி நிகழ்ச்சியின் புகைப்படங்களும்,வீடியோக்களும் வைரலாகி வருகிறது.நாளை தம்பதிகளாகும் இருவருக்கும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

View this post on Instagram

A post shared by Aravinth | Bridal Artist ❤️ (@aravinth_mehendi_makeup)

View this post on Instagram

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

View this post on Instagram

A post shared by MARE❤TALES (@reshma_madhan_addicts)