உச்சகட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியின் பக்கா ACTION PACKED லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் முதல்முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து ஆக்சன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த லியோ திரைப்படத்தின் வசனகர்த்தாக்களான இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி இருவரும் லியோ திரைப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் நடித்திருக்கும் ஹாரல்ட் தாஸ் கதாபாத்திரம் குறித்து அவர்களிடம் கேட்டபோது, “முதல் நாளே அர்ஜுன் சாருக்கும் விஜய் சாருக்கும் எதிரெதிரில் ஒரு உரையாடல் இருக்கிறது என்றால் முதலில் விஜய் சார் பேசக்கூடிய போர்ஷன் எடுத்துவிட்டு பிறகு அர்ஜுன் சார் பேசக்கூடிய போர்ஷன் எடுப்போம். ஆனால் ஒருவரது முகம் தெரியப்போவதில்லை விஜய் சார் பேசும்போது இவருக்கு பின்னால் தான் ஷாட் இருக்கும். அதிலேயே கை எங்கே வைக்க வேண்டும் எப்போது முன்னால் வரவேண்டும் என எல்லாவற்றையும் சரியாக செட் செய்து வைத்துக் கொள்வார். அப்போதுதான் அந்தப் பக்கம் கேமரா வைக்கும்போது சரியாக நடிக்க முடியும் எல்லோரும் அப்படித்தான் நடிப்பார்கள். முதல் ஷாட்டிலேயே மிகவும் லெந்த்தாக அந்த டயலாக் எல்லாம் பேசிவிட்டு டேபிள் மேல் எல்லாம் வந்து கை வைத்து பேசி முடித்த பிறகு கட் சொல்வதற்கு முன்பே டயலாக் முடிந்துவிட்டது என்று விஜய் சாருக்கு தெரியும் கட்டே சொல்லவில்லை அதுவரை இருந்த விஜய் சார் சிரித்த முகத்தோடு இரண்டு கைகளையும் தூக்கி தம்சப் காட்டினார். அதுதான் அர்ஜுன் சாரை பார்த்து அவர் முதலில் சொன்னது. இதுவரைக்கும் நாம் இப்படி ஒரு காம்பினேஷனை பார்த்ததில்லை. விஜய் சாருடைய நேரடி ரியாக்ஷனே தம்சப் காட்டியது தான். ஒருவேளையில் இது பின்னால் ப்ளூபர்ராக வெளி வரலாம் நான் மிகவும் ரசித்தேன். நான் அதை பார்க்கும்போதே ஐயயோ இதை படத்தில் வைத்திருக்கலாமே என்றெல்லாம் தோன்றியது. விஜய் சார் சிரிக்கவே மாட்டார் அவர்கள் சிரிப்பதை பார்த்த போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதன்பிறகு கேமராவை அந்த பக்கம் வைத்து அர்ஜுன் சார் செய்வதை பார்க்கும்போது அவர் அந்த சேரில் உட்கார்ந்து ஒன்று பண்ணுவார் அதைப் பார்க்கும்போது ஹாரல்ட் தாஸ் வந்துவிட்டார் என சொல்வது போல் தான் இருக்கும். அவர் சாதாரணமாக கேரவனில் இருந்து இறங்கி வரும் போதே ஜம்ப் பண்ணி தான் வருவார். அதுவே ஏழுமலை படத்தில் ட்ரெயினில் இருந்து இறங்கி எதிர்காத்தில் நடந்து வருவது போல தான் இருக்கும். அங்கிருந்து ஷாட் வைக்கலாம் என்பது போல தோன்றும் அந்த அளவுக்கு எனர்ஜி…” என இயக்குனர் ரத்னகுமார் தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தியின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.