ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் கூட்டணியின் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் பிரத்தியேக பேட்டி கொடுத்த லியோ படத்தின் வசனகர்த்தாக்களான ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி இருவரும் நமது திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு உரையாடிய போது பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் இப்போது லோகேஷ் கனகராஜ் ஒன்று சொல்கிறார், மாஸ்டர் அல்லது விக்ரம் இரண்டு படங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். கதையில் ஏதாவது ஒரு இடத்தில் இது கொஞ்சம் செட் ஆகவில்லை இன்னும் நன்றாக பண்ணலாம் என்பது போல ஏதாவது விஷயங்கள் நடந்திருக்கிறதா? அதை எப்படி இருந்தது எப்படி மாற்றி இருக்கிறீர்கள்?” என கேட்டபோது, அதற்கு பதிலளித்த இயக்குனர் ரத்னகுமார், “அது மாஸ்டர் திரைப்படத்தில் இருந்தது மாஸ்டர் திரைப்படத்தின் இன்டர்வல் பிளாக்கில், விஜய் சார் இருக்கக்கூடிய இடத்தில் அந்த ஜெயிலுக்குள் எமோஷனலாகி, அழுது, அந்த லெட்டரை கிழித்ததும் கோபம் வந்து திரும்பி அடிக்க தொடங்குகிறார். இங்கே சண்டை நடந்து கொண்டிருக்கும் போது மறுபுறம் விஜய் சேதுபதி சார் ஒரு சந்திப்புக்காக ஒரு இடத்தில் காத்துக் கொண்டிருப்பார். இதுதான் ஸ்கிரிப்டில் இருந்தது. அவர் ஒரு இடத்தில் காத்துக் கொண்டிருப்பார் அவரை கூப்பிட்டவுடன் அவர் உள்ளே போக வேண்டும் அப்படி காத்துக் கொண்டிருக்கும் போது தான் அவருக்கு போன் கால் வரும் அதில் விஜய் சார் கோபமாக பேசுவார் அதற்கு இவர் பதில் சொல்லுவார் அப்படி தான் இருந்தது. ஆனால் இது பத்தாது இங்கு ஒரு பெரிய சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அதே போல் வில்லனும் அவனுடைய இடத்தில் இருக்கிறான் அங்கும் ஒரு சண்டை இருந்தால்தான் அது மாறி மாறி காட்டும்போது அந்த இன்டர்வல் பிளாக் பயங்கரமாக இருக்கும் என்ற ஒரு காரணத்திற்காக செய்தது தான். அது அப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இரண்டு பேர் அதன் பிறகு நேருக்கு நேர் மோதினால் எப்படி இருக்கும் என்பதுதான். அதேபோல் விக்ரம் திரைப்படத்தில் கமல் சார் குழந்தையை காப்பாற்றுவதற்காக வீட்டுக்குள் போய் சத்தம் இல்லாமல் ஒரு சண்டை செய்வார். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அவர்களை அடிப்பார். அது முடிந்து குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியில் வருவார். அதுவரைக்கும் தான் ஸ்கிரிப்டில் இருந்தது. அதற்கு அடுத்த இடத்திற்கு செல்கிறார்கள். அதுவரையும் எடுத்து முடித்த பிறகு லோகேஷ் சொன்னது தான், அந்த குழந்தைக்கு பால் தேவை அது அழுகிறது அதற்காக அவர் மீண்டும் உள்ளே போகிறார் என லோகேஷ் முடிவு செய்தார். ஏனென்றால் அந்த குழந்தைக்கும் கமல் சாருக்கும் உண்டான ஒரு தொடர்பு என்பது இன்னும் பெரிதாக தெரிய வேண்டும். கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது இதற்கடுத்து குழந்தை பகத் பாஸில் அவர்களின் கைக்கு தான் போகப் போகிறது. இங்கே இன்னும் அழுத்தமாக ஒன்று வேண்டும் என்பதற்காக இன்னும் இரண்டு நாள் படப்பிடிப்பு பிளான் செய்து கமல் சாரிடம் பேசி அந்த சண்டைக் காட்சியை எடுத்தோம். அன்பறிவு மாஸ்டர்களுக்கு கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது ஆனால் இது நூறு சதவீதம் சரியாக வரும் என்று லோகேஷ் சொல்லி திரும்ப உள்ள போய் அதற்காக ஒரு சண்டை செய்து அதற்கு பின்னணியில் "போர் கண்ட சிங்கம் EDM" எல்லாம் வைத்து ஒரு மேஜிக் உருவானது. இந்த மாதிரி சில விஷயங்கள் செய்திருக்கிறோம் அதே மாதிரி ஒரு விஷயம் இந்த லியோ படத்திலும் நடந்திருக்கிறது அது பற்றி ரிலீசுக்கு பிறகு பேசலாம்” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட இந்த சிறப்பு பேட்டியின் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.