தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகைகளின் ஒருவராக கடந்த 40 ஆண்டுகளாக பல வெரைட்டியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அந்த வகையில் படையப்பா படத்திற்கு பிறகு இந்த இடைவெளிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பக்கா ஆக்சன் என்டர்டைனர் படமாக ஜெயிலர் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக தெலுங்கில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வரும் குண்டூர் காரம் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது நடித்து வருகிறார். அம்மன், படையப்பா, பாகுபலி என வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் திரை பயணத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் என்றால் அது இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த லீலா கதாபாத்திரம் தான்.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நம்மோடு தனது திரைப்பயணத்தின் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “உங்களுடைய மற்றொரு கடினமான கதாபாத்திரம் என்றால் சூப்பர் டீலக்ஸ். நீங்கள் நடித்திராக ஏன் இதுவரை யாருமே நடிக்காத ஒரு கதாபாத்திரம்... பஞ்சதந்திரம் , ஜெயிலர் மாதிரியான காமெடி கதை களங்கள்... இதுதான் உங்களுக்கானது என நீங்கள் எதை சொல்வீர்கள்? எனக் கேட்டபோது, "இல்லை.. அப்படி இல்லை அதிர்ஷ்டவசமாக எனக்கு வரக்கூடிய கதாபாத்திரங்கள் அப்படி இருக்கின்றன. இப்போது இந்த மாதிரி தைரியமான தைரியமான கதாப்பாத்திரம் என்றால் சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்தீர்கள் என்றால், சூப்பர் டீலக்ஸ் படம் நதியா தான் நடிக்க வேண்டியது. அவரை வைத்து படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு அது சரி வரவில்லை. ஆனால் முதலிலும் தியாகராஜன் குமாரராஜா என்னைத் தான் அணுகினார். அப்போது தேதிகள் இல்லை மற்றும் வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக கைவிடப்பட்டது. அப்போது நதியா தான் அந்த படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவர் மீண்டும் என்னிடம் வந்தார். ஆரம்பத்தில் இருந்து நான் நடித்த படங்களை எல்லாம் வைத்து ஏற்கனவே நான் இது மாதிரி செய்து இருக்கிறேன் என நினைத்திருக்கிறார்கள். பின்னர் இந்த கதாப்பாத்திரத்திற்கு யாரை நடிக்க வைக்கலாம் என அவர்கள் யோசித்தபோது என்னுடைய முந்தைய திரைப்படங்கள் எல்லாம் இதை நோக்கி அவர்களை கொண்டு வந்திருக்கிறது. அதனால் இது ஒரு தொடர் விளைவு தான் ஒவ்வொரு படங்களில் நடிப்பது, ஒரு படம் மற்றொரு படத்திற்கு லீட் கொடுக்கிறது. அதே சமயத்தில் அம்மன் மாதிரியும் ரங்க மார்த்தாண்டம் மாதிரியும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்திரங்கள். இந்த வெரைட்டியான கதாபாத்திரங்கள் தான் என்னுடைய இந்த நீண்ட பயணத்திற்கு காரணமாக இருக்கிறது.” என தெரிவித்துள்ளார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணனின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.