சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆகியிருக்கும் ஜெயில் திரைப்படம் மலேசியாவில் இதுவரை எந்த இந்திய திரையிடமும் படைத்திடாத அளவிற்கு மிகப்பெரிய சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைத்திருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ரசிகர்களை தனது ஸ்டைலால் மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது வயதில் 70களை தொட்ட போதிலும் இன்னும் குறையாத வேகத்தோடு அடுத்தடுத்து அட்டகாசமான படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கவுரவ வேடத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் #தலைவர்170 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தலைவர் 170 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் #தலைவர்171 திரைப்படத்தில் நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இதர அறிவிப்புகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.

முன்னதாக முதல்முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.

ரிலீசான முதல் வாரத்திலேயே 375 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவில் வரலாற்று சாதனை படைத்த ஜெயிலர் திரைப்படம் இரண்டாவது வார இறுதியில் 520 கோடி வசூலித்த நிலையில், மொத்தமாக 600 கோடிகளுக்கு மேல் வசூலித்திற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவில் வேற எந்த திரைப்படங்களும் செய்திடாத மிகப்பெரிய வசூல் சாதனைகளை தொடர்ச்சியாக செய்து வரும் ஜெயிலர் திரைப்படம் தற்போது மலேசிய பாக்ஸ் ஆபிஸில் இந்திய சினிமா வரலாற்றில் அதிகபட்சமாக வசூல் செய்த இந்திய படம் என்ற புதிய சாதனையை தற்போது படைத்திருக்கிறது. வெளிநாடுகளில் ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்டு இருக்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…