பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரான்ஸ் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி வெளியான திரைப்படம் ‘ருத்ரன்’. பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கிய இப்படத்தில் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடலுக்கு இசையமைத்துள்ளார். மேலும் கூடுதலாக படத்திற்கு பின்னணி இசை சாம் சி எஸ் இசையமைத்திருந்துள்ளார். திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ருத்ரன் படக்குழு படத்தில் இடம் பெற்ற ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலின் வீடியோவினை வெளியிட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் அவர்களின் அசத்தலான நடனத்துடன் வெளியான வீடியோ பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வைரலாகி வருகிறது.

பாடாதா பாட்டெல்லாம் பாடல் கடந்த 1962 ல் வெளியான வீர திருமகன் என்ற படத்தில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் இடம் பெற்ற பாடலாகும். இப்பாடலை பிபி ஸ்ரீனிவாசன் மற்றும் எஸ் ஜானகி ஆகியோர் பாடியிருப்பார்கள். பாடளின் வரிகளை கண்ணதாசன் அவர்கள் எழுதியிருப்பார்கள். இந்த பாடல் வெளியான காலம் தொடங்கி இன்று வரை இந்த பாடல் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த மெலடியாகவும் தலைமுறை கடந்த ஆகச்சிறந்த பாடலாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த பாடலின் புது மாதிரியை இன்றைய தலைமுறையினருக்கு கடத்தும் நோக்கில் இசையமைப்பாளர் தரன் குமார் இசையில் பாடகர்கள் சத்திய பிரகாஷ் , நித்ய ஸ்ரீ ஆகியோர் இந்த பாடலை பாடியிருப்பார்கள். இந்த பாடலில் கூடுதலாக ராப் வரிகளை எம்சீ எழுதி பாடியுள்ளார். முன்னதாகவே இந்த பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பிரபலம் பெற்றது குறிப்பிடதக்கது. இந்த பாடலை ருத்ரன் படத்தில் சேர்த்து மேலும் வெகுஜன மக்களிடம் இந்த பாடலை கொண்டு சேர்த்துள்ளனர் படக்குழுவினர்.

முன்னதாக படத்தில் இதே போல் ஏற்கனவே டிரெண்ட் ஆன அசல் கோலார் உடைய ‘ஜோர்தாலா’ பாடலின் வீடியோவில் ராகவா லாரன்ஸ் அவரின் அட்டகாசமான நடனம் ரசிகர்கள் பலரால் அதிகம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.