தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக பல தசாப்தங்களாக இருந்து வருபவர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். தான் இயக்கும் படங்களாக இருக்கட்டும் நடிக்கும் படங்களாக இருக்கட்டும் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அட்டகாசமான பல படங்களை கொடுத்து பல பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் கலைஞராக இருந்து வருகிறார் ராகவா லாரன்ஸ். தற்போது இவர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கத்தில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திலும் பி வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே இவர் நடிப்பில் இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14 ‘ருத்ரன்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஆதரவினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது,

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் மீடியா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவரது அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை,

“விஜய் நண்பர் தான் அந்த ஐடியா கொடுத்தார். என்ன நீ இரண்டு வருஷத்துக்கு ஒரு படம் பன்ற.. தொடர்ந்து படம் பண்ணு.. என்றார். ஒருநாள் ஒரு ரசிகர் கண்கலங்கி கேட்டார், "இரண்டு வருஷத்துக்கு படம் பன்றீங்க.. வருஷத்துக்கு இரண்டு படமாவது பண்ணுங்க" னு எனக்கு இயக்குனராகனும், நடன இயக்குனராக ஆகனும் நினைச்சேன் நிறைவேறிடுச்சு..

ஹீரோவா ஆகனும் ன்றது தோற்றதால வந்தது. வீட்ல படம் பண்ணுப்பா னு அம்மாவும் சொன்னாங்க.. இவங்களாம் சொல்றாங்கனு நம்ம டிரக்ஷன் மட்டுமல்லாமல் வெளியில் இயக்குபவருடனும் படம் பன்றேன். அதை சரியான ஆள் கிட்ட கொடுக்கனும் னு நினைச்சேன்.நம்மள யார் வித்யாசமா காட்றாங்களோ அவங்களுடன் படம் பண்ணனும்னு நினைச்சேன்.இப்போ இருக்கறது கார்த்திக் சுப்புராஜ், வெற்றி மாறன் சார், லோகோஷ் கனகராஜ் னு தேர்ந்தெடுத்து பன்றேன். விக்ரம் படம் பண்ண முடியலனு. அடுத்த படம் லோகேஷ் பண்ணலாம்னு சொல்லிருக்காரு.. அவர் கதை திரைக்கதையில ரத்னா இயக்குகிறார். அது ஆரம்ப கட்ட பணியில் உள்ளது. அப்பறம் வெற்றிமாறன் திரைக்கதையில் தயாரிப்பில் அதிகாரம் னு ஒரு படம் பன்றோம். நம்ம திட்டமிட்டு நல்ல நல்ல இயக்குனருடன் பண்ணனும்னு ஆசை அது அதே மாதிரி அமையுது.. " என்றார் ராகவா லாரன்ஸ்.

மேலும் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் முதலில் ராகவா லாரன்ஸ் அவர்களை கேட்டது குறித்து பகிர்ந்த ராகவா லாரன்ஸ் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி சார் கதாபாத்திரம் நான் தான் பண்ண வேண்டியதா இருந்தது. லோகேஷ் சார் கதைலாம் சொன்னாங்க.. அப்பறம் கொஞ்சம் தேதி பிரச்சனையால் என்னால அதை பண்ணமுடியாமல் போச்சு.. இல்லைன்னா கண்டிப்பா பண்ணிருப்பேன்" என்றார்.

மேலும் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ...