ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது. கடைசியாக தனது நடிப்பில் வெளிவந்த ருத்ரன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த அட்டகாசமான படங்களில் நடித்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமாக தயாராகி வரும் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இயக்குனர் வெற்றிமாறனின் கதை & திரைக்கதையில் உருவாகி இருக்கும் அதிகாரம் திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். இதனிடையே ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்த ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் தான் சந்திரமுகி 2.

முன்னதாக மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து 2005ல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரை பயணத்தில் குறிப்பிடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட சந்திரமுகி 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்.

மேலும் சந்திரமுகி 2 படத்தின் தேவைக்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு அட்டகாசமான டிரான்ஸ்பர்மேஷன்க்கு ராகவா லாரன்ஸ் மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க, பிரபல பாலிவுட் நடிகை நடிகை கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில், வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

வரும் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்ததால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர். மேலும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். வைரலாகும் அந்த போஸ்டர் இதோ…