மண்ணையும் கிராம பின்னணியில் நிலவும் சிக்கல்களையும் எதார்த்தம் மாறாமல் பக்கா கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். வெற்றிமாறனின் ஆடுகளம் திரைப்படத்திற்கு கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய இவர் கடந்த 2013 ல் வெளியான ‘மதயானை கூட்டம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். முதல் படத்திலே ஒரு சமூக பின்னணியில் வாழும் குடும்பத்தாருக்குள் நிலவில் பிரச்சனைகள் அதில் வரும் விளைவுகளை கச்சிதமாக படமாக்கி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் சினிமாவில் இராவண கோட்டம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்தார்.

இராமநாதபுரம் பின்னணியில் உருவான இப்படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கண்ணன் ரவி குழுமம் தயாரிப்பில் உருவான இராவண கோட்டம் திரைப்படத்தின் கதாநாயகனாக சாந்தனு பாக்யராஜ் நடிக்க அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இளைய திலகம் பிரபு, இளவரசு ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிதுள்ளனர். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய லாரான்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளனர். மேலும் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இராவண கோட்டம் திரைப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் எதர்பார்ப்பை மேலும் உயர்த்தியது. அதன்படி திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதவை பெற்று இந்த ஆண்டின் மற்றுமொரு கவனிக்கத்தக்க தமிழ் திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் அவர்களுக்கு சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்கா சிக்காகோ மாநகரில் நடைபெற்ற கிரவுன் பாய்ன்ட் பன்னாட்டு திரைப்பட விருது விழாவில் இராவண கோட்டம் திரைப்படத்திற்காக இயக்குனர் விக்ரம் சுகுமாரன் ‘சிறந்த இயக்குனர்’ என்ற பிரிவில் விருதினை வென்றுள்ளார். இதையடுத்து படக்குழுவினர் இந்த அறிவிப்பினை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த விருது குறித்து இராவண கோட்டம் படத்தின் நாயகன் சாந்தனு பாக்ய ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“உங்கள் மகுடத்தில் மற்றுமொரு இறகு” என்று குறிப்பிட்டு அவரது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தற்போது சாந்தனு அவர்களின் பதிவு இனையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக இயக்குனர் விக்ரம் சுகுமாரன் அவர்களுக்கு ஈஸ்டர்ன் யூரோப் திரைப்பட விழாவில் இராவண கோட்டம் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.