இந்திய திரையுலகின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகராக திகழும் நடிகர் மாதவன் நடிகராக மட்டுமல்லாமல் தற்போது முதல் முறை இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் படமாக மாதவன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ராக்கெட்ரி.

ட்ரை கலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள் ராக்கெட்ரி திரைப்படத்திற்கு மாதவன் திரைக்கதை எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார். ராக்கெட்ரி-நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்க, அவரது மனைவி மீனா நாராயணன் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார். மேலும் ரவி ராகவேந்திரா, கார்த்திக் குமார், மோகன் ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் சூர்யா மற்றும் நடிகர் ஷாரூக் கான் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.

திரு.நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தமிழ், ஹிந்தி & ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவரும் ராக்கெட்ரி படத்திற்கு ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் ராக்கெட்ரி திரைப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ராக்கெட்ரி திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் முன்னணி கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ராக்கெட்ரி திரைப்படத்தைப் பார்த்த அனைவரும் மாதவன் மற்றும் படக்குழுவினரை எழுந்து நின்று பாராட்டியுள்ளனர். ராக்கெட்ரி திரைப்படத்தை திரைப்பட விழாவில் அனைவரும் பாராட்டிய வீடியோ இதோ…

Thank you so so much sir . ❤️🙏🙏🙏🚀🚀 https://t.co/qf9e6NRbZr

— Ranganathan Madhavan (@ActorMadhavan) May 20, 2022