இந்தியாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ ஆர் ரகுமான். 90 களிலிருந்து இன்று வரை பல மொழி ரசிகர்களின் மனதை தன் இசையால் கொள்ளை கொண்ட ஏ ஆர் ரகுமான் தற்போது பல இந்திய மொழிகளில் பல படங்களில் பணியாற்றி வருகிறார். அதன்படி அவரது இசையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. தற்போது அவர் இசையில் மாமன்னன், அயலான், மைதான் ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழி திரைத்துறையில் பிஸியாக இருக்கும் ஏ ஆர் ரகுமான் அவ்வப்போது தனி நிகழ்சிகளும் ரசிகர்களின் முன்னிலையில் நடத்துவார். அதன்படி இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் மியூசிக்கல் கான்செர்ட் நடத்துவது வழக்கமாக வைத்து உள்ளார்.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 30 ம் தேதி புனே ராஜ்பகதூர் மில்ஸ் பகுதி அருகே திரைத்துறையில் லைட் மேன்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் பிரம்மாண்டமாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் மாலை 4 மணிக்கு தொடங்கி நிகழ்ச்சி கொண்டாட்டங்களுடன் அரங்கேறியது. இரவு 10 மணி அளவில் இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரகுமான் தில்சே படத்தில் இடம் பெற்ற ‘சையா சையா’ பாடலை மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென் புனே நகர போலீஸ் அதிகாரிகள் மேடையில் ஏற தொடங்கினார். போலீஸ் ஒருவர் தனது வாட்சை காட்டி நேரம் முடிந்தது என்று சைகை மூலம் தெரிய படுத்தினார்.

இதையடுத்து அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சளிட்டனர். பின்னர் போலீசாரின் வற்புறுத்தலின் படி ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சியை முடித்து விட்டு மேடையில் இருந்து இறங்கினார். இதையடுத்து அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. உண்மையிலே நடந்தது நிகழ்ச்சிக்கு அனுமதி 4 மணியிலிருந்து 10 மணி வரை தான் பெற்றிருந்தனர். 10 மணி நேரம் கடந்து நிகழ்ச்சி நடைபெற்றதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருந்தாலுன் இந்தியாவின் முக்கியமான மனிதர். ஆஸ்கார் விருதுகளை வென்றவர் வென்ற மதிப்புடன் அவரை நடத்திருக்க வேண்டும். மேடை நாகரீகம் கருதி போலீஸ் அவரை நடத்தியிருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். மேலும் இணையத்தில் #westandwithArrahman , #DisrespectOfArrahman என்று ஹெஷ்டேக்குகளை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஏ ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் புனே நிகழ்ச்சி தொகுப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.