கண்ணே காலைமானே படத்தினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சைக்கோ.மிஷ்கின் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அதிதி ராவ் ஹைதாரி,நித்யா மேனன்,இயக்குனர் ராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.டபுள் மீனிங் ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் முதல் பாடலான உன்ன நெனச்சு என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு இந்த பாடலின் ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

A lilting #Maestro composition sung by @sidsriram releases tomorrow evening at 5 PM! 💕

Stay tuned for #UnnaNenachu from #Psycho coming your way! 🎶#Mysskin #Ilaiyaraaja #ArunMozhiManickam @Udhaystalin @MenenNithya @aditiraohydari #Kabilan @DoubleMProd_#PsychoFirstSingle pic.twitter.com/eglIH4zfRb

— Sony Music South (@SonyMusicSouth) November 17, 2019