தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளரும் பிரபல நடிகருமான T.சிவா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறகு தளபதி விஜயின் திரைப்படங்கள் தான் சினிமாவில் மினிமம் கேரன்டி படங்கள் என்று தளபதி விஜயின் திரைப்படங்கள் குறித்து பேசி இருக்கிறார். நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய போது பல சுவாரஸ்ய தகவல்களை தயாரிப்பாளர் T.சிவா பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும் போது, “ஜெயிலர் படத்திற்கு அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு படம் என்றால் அது லியோ. ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் லியோ படத்திற்கு ஒரு எதிர்பாராத எதிர்பார்ப்பு. இப்போதே படம் ஆயிரம் கோடியை கடந்து விடும் என்றெல்லாம் பேசுகிறார்கள். இது ஒரு வகையில் படத்தை பாதிப்பதற்கு ஏதாவது வாய்ப்புகள் இருக்கிறதா?” என கேட்ட போது, “விஜய் படங்கள் எல்லாமே இதே மாதிரி எதிர்பார்ப்புகளில் தான் வரும். போன படம் எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பில் வந்தது என்று நினைத்து பாருங்கள்.” என்றார்.

தொடர்ந்து அவரிடம், “ஆனால் லியோ திரைப்படத்தை பொருத்தவரையில் காட்சிகளிலிருந்து டிக்கெட்களிலிருந்து எல்லாமே போன படத்தை விட அதிகமாக ஒரு படி இருக்கிறதே?” என கேட்டபோது, “அதற்கு காரணம் பார்த்தீர்கள் என்றால் மாஸ்டர் படம் வந்த போது விஜய் தான் ரொம்ப பெரிதாக இருந்தது. அதற்கு கீழ் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என இருந்தது. ஆனால் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் காம்பினேஷனா! என்று ஒன்று இருக்கிறது. அப்புறம் அதில் நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். சஞ்சய் தத் இருக்கிறார் அர்ஜுன் இருக்கிறார் இவர் இருக்கிறார் அவர் இருக்கிறார் என்று இந்த விஷயங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய எதிர்பார்ப்பு உருவாகிக்கொண்டே வருகிறது. மேலும் அவருடைய அறிக்கைகள் அவர் இது மாதிரி அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற விஷயங்கள். இது மாதிரி சின்ன சின்ன பரபரப்பாக இருக்கக்கூடிய விஷயங்கள் இருக்கும்போது இந்த எதிர்பார்ப்பு ஏறிக் கொண்டே இருக்கும். ஆனால் ஒன்று தமிழ் சினிமாவில் ரஜினி சாருக்கு பிறகு ரொம்ப மினிமம் கேரன்டி இருக்கக்கூடிய ஒரு நடிகர் யார் என்றால் அது விஜய் சார் தான். எல்லா ஹீரோக்களுக்குமே நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நிறைய வசூல் செய்யக்கூடிய படங்கள் இருக்கிறது தான். விஜய் சார் உடைய சில மோசமான படங்கள், தோல்வி படங்கள் என சொல்லக்கூடிய திரைப்படங்களும் கூட பெரிய நஷ்டத்தை கொடுக்காது. அந்த மினிமம் கேரன்டி விஜய் சாரிடம் இருக்கிறது. படம் பயங்கர தோல்வி எவ்வளவு இழப்பாகிவிட்டது என்று கேட்டால் ஒரு பத்து சதவீதம் இழப்பு என்று சொல்வார்கள் இதுவே மற்ற யாருக்காவது இழப்பு என்று இருந்தால் மொத்தமாகவே காணாமல் போய்விடும் 50 சதவீதம் போய்விட்டது 70 சதவீதம் போய்விட்டது என்று இருக்கும். இவ்வளவு வருடங்களில் தோல்விகளில் கூட தோல்வி படங்களில் கூட லாபம் கொடுத்தது ரஜினி சார் அதற்கடுத்து இப்போது கண்டிப்பாக விஜய் சார். அவருக்கு அந்த ரசிகர்கள் இருக்கிறார்கள் நீங்கள் எப்படி படம் பண்ணினாலும் அது குறைந்தது இவ்வளவு வசூல் பண்ணும் என ஒரு கேரண்டி இருக்கிறது.” என்றார். தயாரிப்பாளர் T.சிவா அவர்கள் பேசிய அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.